பட்டப்பகலில் சினிமாலை மிஞ்சிய சம்பவம்! அரசு ஊழியர் வெட்டி படுகொலை! வெளியான பகீர் காரணம்!

Published : Feb 04, 2025, 12:34 PM ISTUpdated : Feb 04, 2025, 12:37 PM IST
 பட்டப்பகலில் சினிமாலை மிஞ்சிய சம்பவம்! அரசு ஊழியர் வெட்டி படுகொலை! வெளியான பகீர் காரணம்!

சுருக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் சங்கர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே பழவூரைச் சேர்ந்தவர் சங்கர் (53). இவர் வேப்பிலான்குளம் கிராம ஊராட்சியின் செயலராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வேப்பிலான்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தூரத்தியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கர் இருசக்கர வாகனத்தில் மின்னல் இயக்கியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் சங்கரை சுத்துப்போட்டது. 

இதையும் படிங்க: காலையிலேயே பொதுமக்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி! பால் விலை மீண்டும் உயர்வு!

பின்னர் சங்கரை கை, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் நெல்லை பெருங்குடியில் இருந்தவர் சங்கர். இவரது மனைவி வடிவு. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வேப்பிலான்குளம் கிராம ஊராட்சியின் செயலராக இருந்த சங்கருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. பஞ்சாயத்து செயலாளராக இருந்த சங்கர் பெண்களிடம் தவறான நோக்கில் பேசுவது, தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பதுமாக இருந்துள்ளார். இதனால் சங்கரை கொலை செய்ய சிலர் திட்டமிட்டனர். இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட சங்கர் அலுவலகத்தில் இருக்கும் வேலைகளை முடித்துக்கொண்டு சிக்கிரமாக வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

இதையும் படிங்க: கடுமையான பனிமூட்டத்தால் ஸ்தம்பித்த சென்னை! ரயில், விமான சேவைகள் பாதிப்பு! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

ஆனால், அந்த கும்பல் அவரது வீட்டையே கடந்த சில நாட்களாகவே நோட்டமிட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று 10 மணிக்கு வீட்டில் அலுவலகத்தில் சென்றபோது அவரை பின்தொடர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. பட்டப்பகலில் அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பணகுடி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நெல்லையில் 7 கொலைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்
வெள்ள அபாய எச்சரிக்கை: தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.