பூரண மதுவிலக்கு: அன்புமணி ராமதாஸ் சொன்ன ஐடியா!

Published : Jun 21, 2023, 03:13 PM IST
பூரண மதுவிலக்கு: அன்புமணி ராமதாஸ் சொன்ன ஐடியா!

சுருக்கம்

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கத்துடன் 5329  டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 கடைகள்  மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும், நாளை முதல் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

BREAKING: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது..!

அந்த வகையில், தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேசமயம், மீதமுள்ள மதுக்கடைகளையும் மூட கால அட்டவணை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இது அமைய வேண்டும்.

 

 

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் அறிவித்தவாறு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக நாளை முதல் 500 மதுக்கடைகள் மூடப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மூடப்படும் மதுக்கடைகள் தவிர மீதமுள்ள 4829 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காலாண்டுக்கு 500 மதுக்கடைகள் மூடப்பட்டால், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகி விடும். அதற்கேற்றவாறு உடனடியாக கால அட்டவணையை தயாரித்து வெளியிடுவதுடன், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!