முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்டிருந்த இளநீர், வாழைத்தார் போன்றவற்றை போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்ற பொதுமக்கள்.
திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் 12 கோடி மதிப்பில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து கலைஞர் கோட்டத்தில் உள்ள திருமண அரங்கில் நான்கு மணமக்களுக்கு திருமணத்தை முதல்வர் நடத்தி வைத்தார்.
undefined
அதனைத் தொடர்ந்து கலைஞர் கோட்ட திறப்பு விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமான மேடையில் நடைபெற்றது.இந்த மேடை நுழைவு வாயிலின் முகப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் இளநீர் குலைகள் மற்றும் ஈச்சங்காய் பனங்காய் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கூட்டம் முடிந்து முதல்வர் சென்ற பிறகு பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் வெளியில் வந்தனர்.
ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்; போஸ்டர் ஒட்டி திமுக நிர்வாகி மிரட்டல்
அப்போது முகப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த வாழைத்தார் இளநீர் பனங்காய் போன்றவற்றை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றனர். சில இளைஞர்கள் டாட்டா ஏஸ் வாகனத்தை வைத்து வாழைத்தார்களை அறுத்து அந்த வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றனர். ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் என தங்களால் இயன்ற அளவிற்கு வாழைத்தார் இளநீர் போன்றவற்றை எடுத்துச் சென்ற வண்ணம் இருந்தனர்.
ஆட்சியரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைய சொன்ன மின்வாரிய அதிகாரி இடை நீக்கம்