கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்காக திருவாரூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையிலும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 12 கோடி மதிப்பில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தில் இரண்டு திருமண அரங்குகள், அருங்காட்சியம் நூலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
undefined
இந்த கலைஞர் கோட்டத்தினை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் நித்திஷ் குமாரும் தேஜஸ்ஸ்ரீ யாததவும் சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த நிகழ்விற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; பாபநாசம் பட பாணியில் உடலை புதைத்த கொடூரம்
இந்த நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலமாக திருச்சி வருகை தந்து அங்கிருந்து தரைவழி மார்க்கமாக திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்தார்.முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையையும் பொருட்படுத்தாமல் முதல்வர் வருகைக்காக காத்திருந்தனர்.
திருப்பூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
மேலும் முதல்வர் வருகை தந்த உடன் அவர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் வாழ்த்து முழக்கங்களையும் எழுப்பினர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ வேலு, கே.என்.நேரு, டி.ஆர்.பி ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் வரவேற்பு அளித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.