திருவாரூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு கூலிங் கிளாஸ் அணிந்தபடி புதுமண தம்பதிகள் குத்தாட்டம் போட்டி வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் அக்கரைக் கோட்டகம் பகுதியைச் சேர்ந்த சேகர் கொளஞ்சி தம்பதியினரின் மகன் விஜய் என்பவருக்கும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மலர் தம்பதியினரின் மகள் அம்சவள்ளிக்கும் அக்கரைக்கோட்டகம் பகுதியில் உள்ள மழை மாரியம்மன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.
undefined
இந்த நிலையில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் வீட்டில் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது உறவினர்கள் உணவு அருந்தி கொண்டிருந்தபோது புது மணத் தம்பதிகள் இருவரும் உறவினர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் திடீரென நடனமாடத் தொடங்கினர். கல்யாண கோலத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு க்யூட்டாக வெட்கப்பட்டு கொண்டே தம்பதிகள் இருவரும் நடனமாடியுள்ளனர். அப்போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கத்தி கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நத்தம் அருகே கோவில் திருவிழாவில் போட்டி போட்டு வழக்கு மரம் ஏறிய இளைஞர்கள்
இந்த வீடியோ மணமகன் விஜயின் நண்பர்களால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது. கூலிங் கிளாஸ் உடன் தம்பதிகள் குத்தாட்டம் போட்ட வீடியோவை நண்பர்கள் சமூக வலைதலங்களில் பரப்பி வருவதுடன் தம்பதிகளுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தேனியில் உடல் உறுப்புகள் அறுக்கப்பட்டு பெண் கொடூர கொலை; காவல்துறை விசாரணை