PM Modi in Coimbatore : கோவையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று மக்களை சந்தித்து வருகின்றார் பிரதமர் மோடி. அவருடன் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் முருகன் பங்கேற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1ம் தேதி வாக்கு பதிவு முடிவடைகின்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 4ம் தேதி அந்த வாக்குகள் எனப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் இந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவில் முதல் கட்டத்தில் தமிழகத்திற்கு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவின் வடபகுதிகளில் பெரும் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்திருக்கும் பாஜக, தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்களுடைய பலத்தை அதிகரிக்க, பல யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.
undefined
புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக
அதில் ஒரு பகுதியாக பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்திற்கு இந்த வருடத்தில் ஏற்கனவே பலமுறை மக்களை சந்திக்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவையில் நடைபெறும் ரோட் ஷோ ஒன்றில் பங்கேற்க தற்பொழுது கோவை வந்திருக்கிறார் மோடி. பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடன் இருக்க வாகனத்தில் இருந்தபடியே மக்களுக்கு கையசைத்து தனது வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார் பிறந்தார் மோடி.