மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாக நாடாளுமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது. ஒருவழியாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள், வேடபாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 7 கட்டமாக நடைபெற்ற இத்தேர்தலில், முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற உள்ளது.
தமிழகத்தில் திமுக கட்சி தலைமையிலான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. பாஜக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இத்தேர்தலில் எவ்வளவு செலவுசெய்யலாம் என்ற அதிகபட்ச தொகை எவ்வளவு என்பதும் தேர்தல் ஆணையம் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட 15 லட்சம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலைவிட 12 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் செலவினங்கள், தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்தது முதல் இவை கணக்கில் சேர்க்கப்படும். அனைத்துக் கட்ட வாக்குப் பதிவுகளும் முடிந்து, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த தேர்தல் செலவுக் கணக்கை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
கோவையில் 2.5 கிலோ மீட்டருக்கு மோடியின் ROAD SHOW.. வழி நெடுக பாஜக செய்த ஏற்பாடுகள் என்ன.?
தேர்தல் செலவுக் கணக்கை ஒப்படைக்க தவறும் வேட்பாளர்கள் மீது, தேர்தல் ஆணையம், உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும். ஒருவேளை வெற்றி பெற்ற வேட்பாளர், தேர்தல் செலவுக் கணக்கை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் அவர் பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் அடுத்த 3 ஆண்டு காலம் வேறு எந்த தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாதபடி தடையும் விதிக்கப்படும்.