திடீர் ட்விஸ்ட்.. பாமகவோடு கூட்டணி பேச்சுவார்த்தையை நிறுத்திய அதிமுக.! சேலத்தில் மோடியோடு மேடையேறும் அன்புமணி?

By Ajmal Khan  |  First Published Mar 18, 2024, 2:28 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் கோரிக்கை அதிகரிப்படியாக இருந்த காரணத்தால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 


தேர்தல் கூட்டணி நிலை என்ன.?

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு களத்தில் இறங்கவுள்ளது. ஆனால் எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணியில் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாமக மற்றும் தேமுதிகவின் அதிகப்படியான கோரிக்கை என கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து இந்த இரண்டு கட்சிகளுக்கும் தொடர்ந்து அழைப்பு விடுப்பதால் தங்களது தொகுதிகளின் எண்ணிக்கையும் மற்ற விஷயங்களையும் அதிகமாக எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இதனால் இன்னமும் மதில் மேல் பூனையாக பாமக மற்றும் தேமுதிக இருந்து வருகிறது. இதில் தற்போது அதிமுக- தேமுதிக கூட்டணியில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

மதில் மேல் பூனையாக பாமக, தேமுதிக

அதே நேரத்தில் பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதில் 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை விட கூடுதலாக பாமக எதிர்பார்ப்பதால் அதிமுக தனது பேச்சுவார்த்தையை கடந்த 3 தினங்களுக்கு முன்பே நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக எம்எல்ஏ அருள் தனது தனிப்பட்ட விஷயத்திற்காக சந்தித்ததாகவும், கூட்டணிக்காக சந்திக்கவில்லையெனவும் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இணையும் பாமக

அதிமுக- பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில்  வட மாவட்டங்களில் வன்னியர்கள் வாக்குகள் அதிகமாக உள்ள 7 தொகுதியையும் பாமக கேட்டுள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் பாமக வாக்கு வங்கி அதிகமாக உள்ள 7 தொகுதியையும் பாமகவிற்கே ஒதுக்கிவிட்டால் அதிமுகவிற்கு என்ன பயன் என அதிமுக வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.  

இதன் காரணமாகவே பாமகவை தங்கள் அணிக்கும் இழுக்கும் பேச்சுவார்த்தை நிறுத்திக்கொண்டதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. எனவே இன்று மாலை நடைபெறும் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டு நாளை சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடியோடு அன்புமணி மேடையேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங், விசிக, கம்யூனிஸ்ட் களம் இறங்கவுள்ள தொகுதிகள் எது.? வெளியான இறுதி பட்டியல்

click me!