அரளி விதை, தூக்கு, மொட்ட கிணறு - பரீட்சையில் பெயில் ஆனதால் மாணவர்கள் விபரீதம்

First Published May 16, 2018, 3:07 PM IST
Highlights
plus two students suicide attamped


தமிழகத்தில் மார்ச் 3ந்தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கான அரசுத் தேர்வு நடைபெற்றது. இதில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் தேர்வினை எழுதினார்கள். இன்று தேர்வுக்கான தேர்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்த  கள்ளக்குறிச்சியை சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் இளமதி என்ற மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதில் உயிர் இழந்துள்ளார்.

  தண்டலை  கிராமத்தை  சேர்ந்த   தனலட்சுமி  என்பவர்  தூக்கு மாட்டியும், திருக்கணங் கூரை  சேர்ந்த  அறிவழகன் என்னும் மாணவன்   அரளி விதை  தின்றும்   தற்கொலை  முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர்.இருவரும்   உயிருடன்  மீட்கப்பட்டு  கள்ளக்குறிச்சி  அரசு  மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை  பெற்று வருகின்றனர்.


 சமூகம், பெற்றோர்களும் பிள்ளைகளை புரிந்து கொண்டு தேர்வை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் நடந்த தோல்வியை சொல்லி அவர்களை காயப்படுத்தக்கூடாது.

click me!