வரலாறு காணாத உச்சம்… ரூ.105ஐ கடந்தது பெட்ரோல்… கலங்கும் வாகன ஓட்டிகள்

By manimegalai aFirst Published Oct 28, 2021, 7:19 AM IST
Highlights

தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105 ரூபாயை கடந்திருப்பது வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105 ரூபாயை கடந்திருப்பது வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் என்ன விலைக்கு நிர்ணயிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நடைமுறைப்படி நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை நிர்ணயித்த வருகின்றன.

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இடையில் சில நாட்களை தவிர மற்ற நாட்களில் விலை ஏற்றம் இருந்து வருகிறது.

விலை நிர்ணயத்தை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள், 5 பைசா, 10 பைசா என்ற அளவில் விலையை உயர்த்தின. ஆனால் இப்போது நாள்தோறும் 30 காசுகள் என்று விலையை உயர்த்தி வருகிறது.

இந் நிலையில புதிய விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன. இந்த விலையானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்து ரூ.105.13 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது. 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.101.25 காசுகளுக்கு விற்பனையாகிறது.

தொடரும் இந்த விலை உயர்வு நடுத்தர, ஏழை மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!