20 நாளுக்கு அப்புறம் நடந்து போச்சே… காலையிலேயே வாகன ஓட்டிகள் ஏமாற்றம்…

Published : Sep 24, 2021, 08:39 AM IST
20 நாளுக்கு அப்புறம் நடந்து போச்சே… காலையிலேயே வாகன ஓட்டிகள் ஏமாற்றம்…

சுருக்கம்

கிட்டத்தட்ட 20 நாட்கள் கழித்து டீசல் விலை மட்டும் இன்று உயர்ந்துள்ளது.

சென்னை: கிட்டத்தட்ட 20 நாட்கள் கழித்து டீசல் விலை மட்டும் இன்று உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்துக்கு ஏற்ப நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அதன்படி தினமும் புதிய விலை நிலவரம் அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் காலை 6 மணி முதல் அது அமலுக்கு வரும்.

இந் நிலையில் 20 நாட்களுக்கு பின்னர் டீசல் விலையில் மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. அதாவது டீசல் விலை ஒரு லிட்டர் ஒரே நாளில் 20 காசுகள் அதிகரித்து ரூ. 93.46 காசுகளாக உள்ளது. பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.96 காசுகளாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 20 நாட்களாக எந்த விலையேற்றம் இல்லாமல் இருந்தால் வாகன ஓட்டிகள் குஷியில் இருந்தனர். ஆனால் தற்போது டீசல் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் கொண்டு போய் விட்டிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!