வரலாறு காணாத பெட்ரோல் விலை…! தலையில் ‘கைவைத்த’ வாகன ஓட்டிகள்…

By manimegalai aFirst Published Oct 3, 2021, 7:24 AM IST
Highlights

தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை கடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை கடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. ஆகஸ்ட் மாதம் குறைந்து காணப்பட்ட பெட்ரோல், டீசல் விலை பின்னர் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்க ஆரம்பித்தது.

படிப்படியாக விலை அதிகரித்து இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்துவிட்டது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ. 100.01 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.95.31 ஆக இருக்கிறது.

மாமல்லபுரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.24, மரக்காணத்தில் ரூ.1000.98, கடலூரில் ரூ.101.83, சிதம்பரத்தில் ரூ.102.11, மதுரையில் ரூ.100.37, திருச்சியில் ரூ. 100.24, சேலத்தில் ரூ.100.54 காசுகளாக உள்ளது. மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்திருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

click me!