வௌவால்கள் மீது கொண்ட பாசத்தால் தீபாவளிக்கு கூட பட்டாசு வெடிக்காத கிராமம்…

First Published Oct 19, 2017, 8:12 AM IST
Highlights
Pattasu does not burst into Diwali with the love of the bats


திருச்சி

திருச்சியில் உள்ள கிராமத்தில் வௌவால்கள் மீது கொண்ட பாசத்தால் அவற்றிற்கு சத்தம் ஆகாது என்பதால் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது தோப்புபட்டி கிராமம். இங்குள்ள பழமை வாய்ந்த ஆலமரத்தின் கீழ் பகுதியில் முனியப்பன்சாமி உள்ளது.

சுற்றி வயல் சூழ்ந்த பகுதியின் மையத்தில் அமைந்துள்ள ஆலமரத்தில் தொடக்க காலங்களில், வௌவால்கள் அதிகளவில் வசித்து வந்தன. பின்னர் வௌவால்களில் அதிக மருத்துவ குணம் உள்ளது என்பதை அறிந்த சில கொரூர குணம் கொண்டவர்கள் அதனை வேட்டையாடினர். இதனால் அந்த வௌவால்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்தன.

இதனால் வௌவால்களை காப்பாற்றிய வேண்டும் என்று எண்ணிய தோப்புபட்டி கிராம மக்கள், வேட்டையாட வருபவர்களின் துப்பாக்கிகளை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனால் வௌவால்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மேலும், வௌவால்கள் வாழும் பகுதியில் சத்தம் உண்டாகாமல் இருக்க தீபாவளி உள்பட எந்த விழாக் காலங்களிலும் பட்டாசு வெடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்று அதனை இன்றுவரை கடைப்ப்டித்து வருகின்றனர்.

இதனால் அந்த ஊரில் நடக்கும் எந்த திருமணம், திருவிழா, பட்டாசு என எந்த சிறப்பு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி பட்டாசு வெடிப்பதே கிடையாது.

அதனைட் பல வருடங்களாக கடைப்பிடித்து வரும் மக்கள், இந்த வருட தீபாவளி பண்டிகையின்போதும் பட்டாசு வெடிக்கவில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் சொல்லுக்கு ஏற்ப உயிர்நேயவாதிகளாய் இக்கிராம மக்கள் வாழ்வது பாராட்டுக்குரியது மற்றும் பெருமைபடத்தக்கது ஆகும்.

click me!