பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி! கைதுக்கு பயந்து கோர்ட் படியேறிய பாஜக நிர்வாகி! சாட்டையை சுழற்றிய நீதிபதி!

By vinoth kumar  |  First Published Sep 26, 2024, 5:53 PM IST

Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. செல்வகுமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அவதூறு பதிவை நீக்கவும், செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் வதந்தி பரப்பினார். இதனை மறுத்த கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக திட்டவட்டமாக தெரிவித்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இது தொடர்பாக வதந்தி பரப்பியதாக பழனி அடிவாரம் காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோஜ் பி செல்வம் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்ற காவல் துறையினர், கோவையைச் சார்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பியது என 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: DEMU vs MEMU: DEMU மற்றும் MEMU ரயில்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன? Speed எவ்வளவு?

இந்நிலையில், பாஜக நிர்வாகி செல்வக்குமார் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அன்பு நீதி: பாஜக நிர்வாகி செல்வகுமார் தவறான தகவலை பதிவிட்டதால் மதரீதியான பிரச்சனைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியல் செய்யப்படுகிறது. ஆகவே மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:  Government Holiday: 9 நாட்கள் தொடர் விடுமுறை! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

இதையடுத்து நீதிபதி சமூக வலைதளங்களில் கருத்தை பதிவிடுவதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்டு விட்டதாக சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் மன்னிப்பு கேட்டு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மனுதாரர் 3 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும், பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார் செல்போனை காவல்துறையிடம் சமர்ப்பிக்கவும், தனது செயலுக்கு சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவிக்கவும், அவதூறு ட்வீட்டை நீக்கவும் உத்தரவிட்டு செல்வகுமாருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

click me!