டேய் மச்சான் ஓடு டா ஓடு; மூணாறு சாலையில் வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய படையப்பா

By Velmurugan s  |  First Published May 27, 2024, 4:06 PM IST

கேரள மாநிலம், மூணார் பகுதியில் சாலையில் நடமாடிய படையப்பா யானையால் கார்களில் வந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். 


கேரளா மாநிலம் மூணாரில் இருந்து கல்லாறு சென்று கொண்டிருந்த உள்ளூர் வாசிகள் தங்கள் பகுதிக்கு செல்லும் போது எதிரில் படையப்பா யானையானது சாலையில் வந்துள்ளது. வழக்கம் போல் யானை வாகனங்களை பார்த்தால் சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் செல்லும் போது யானையானது தொடர்ந்து எதிர் திசையில் வாகனங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

இதனால் அவர்கள் வந்த வாகனத்தை பின்னோக்கி எடுத்து சென்றனர். குறுகிய பாதை என்ற காரணத்தினால் இரு கார்களும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் வந்த நபர்கள் யானையை பார்த்து பயந்து கார்களை விட்டு வெளியேறி ஓடினர். அந்த காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tap to resize

Latest Videos

மகள்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்க குட்டைக்கு அழைத்து சென்ற தந்தை; மகள்களோடு பிணமாக வீடு திரும்பிய சோகம் - கோவையில் பரபரப்பு

இத்தகைய நிகழ்வின் போது ஒரு காரில் இருந்த ஓட்டுநர் சதீஷ் சாதூரியமாக காரை பின்னோக்கி எடுத்து யானை தொடர்ந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்ததால் படையப்பா யானை மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது. கார்களில் இருந்தவர்கள் அனைவரும் மீண்டும் கார்களில் ஏறி சென்றனர். படையப்பா யானையானது வனத்துறை கண்காணிப்பில் இருந்து வருகிறது. 

மகனின் காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மாமனார் - இராமநாதபரத்தில் பரபரப்பு சம்பவம்

ஆனால் அது சிறிது காலத்திற்கு வனப்பகுதிக்குள் சென்று விட்ட காரணத்தினால் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிக்காமல் இருந்தனர். தற்போது மீண்டும் படையப்பா யானை சாலையில் நடமாடிவருவதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!