ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர்தான்: அடித்துச் சொல்லும் தமிழிசை!

By Manikanda Prabu  |  First Published May 27, 2024, 3:16 PM IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு இந்துத்துவா தலைவர்தான் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதன்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனது கட்சி நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், இந்துத்துவா தலைவரான, அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழக அரசியலில் பாஜக நிரப்புகிறது என்றார்.

Tap to resize

Latest Videos

அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு இந்துத்துவா தலைவர்தான் என நிச்சயமாக சொல்கிறேன் என பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சினையில் தமிழகமும், கர்நாடகமும் சகோதரர்கள்: கர்நாடக அமைச்சர் முனியப்பா!

அவர் தற்போது இருந்திருந்தால் ராமர் கோயில் சென்று ராமரை கும்பிட்டு விட்டு, இந்தியாவின் 100 ஆண்டு கனவு நிறைவேறியது என்ற ஒரு கருத்தைச் சொல்லி இருப்பார் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என்ற தமிழிசை சௌந்தரராஜன், “பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா. நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் அவர். ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார். ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்; ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர்.” என குற்றம் சாட்டினார்.

click me!