சவுக்கு சங்கர் கைதாக முக்கியக் காரணம் தங்கை சுஜாதாவா? அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்!

By SG Balan  |  First Published May 27, 2024, 3:33 PM IST

சவுக்கு சங்கர் சிறை செல்வதற்கு முதல் காரணம் அவரது தங்கை சஜாதா தான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. தங்கை சுஜாதாவின் பென்டிரைவை பயன்படுத்தியதால் தான் சவுக்கு சங்கர் முதல் முறையாக சிறைக்குச் சென்றார் எனக் கூறப்படுகிறது.


போதைப்பொருள் வழக்கில் சிக்கி போலீஸ் காவலில் இருக்கும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் சிறைக்குச் செல்வதற்கு அவரது உடன்பிறந்த சகோதரிதான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

ஊகடவியலாளர் சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றியவர். 2008ஆம் ஆண்டில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார். இதனால், அரசுப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அவர் 'ஊழல் உளவு அரசியல்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

Tap to resize

Latest Videos

பின்னர் வழக்கில் இருந்து மீண்டு யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகள் அளித்து வந்தார். குறிப்பாக தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசிவந்தார். சில மாதங்களுக்கு முன் சவுக்கு மீடியா என்ற சொந்த நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்த இரண்டு நபர்கள் யார்.? சிபிஐ விசாரணை தேவை-வெளியான பரப்பு கடிதம்

குண்டாஸ் பாய்ந்தது:

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பற்றி அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் இருந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி, குண்டர் சட்டமும் பாய்ந்தது. திமுக அரசு தங்களை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை ஒடுக்க இவ்வாறு பொய் வழக்குகளை ஜோடிக்கிறது என்ற விமர்னங்களும் எழுந்ததன. ஆனால், பெண் போலீசார் சவுக்கு சங்கருக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அவர் கைது செய்யப்பட்டதை வரவேற்றனர்.

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் ஃபெலிக்ஸும் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்த அதிரடி கைது நடவடிக்கைகள் மூலம் தமிழக போலீசார் இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி விசாரணை நடத்துவது தெரியவந்துள்ளது. காவல்துறையின் வாதத்தை ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதனிடையே சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டாம் என வலியுறுத்தி இரண்டு முக்கிய பிரமுகர்கள் தன்னிடம் பேசியதாக சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இந்த இரண்டு பேர் யார், அவர்கள் பெயரை நீதிபதி வெளிப்படையாகக் கூறாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சவுக்கு சங்கர் சிறை செல்வதற்கு முதல் காரணம் அவரது தங்கை சஜாதா தான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சவுக்கு சங்கர் தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் சிக்கியபோது விசாரணை அதிகாரிகளிடம் சுஜாதா என்ற பெயர் கொண்ட பென்டிரைவ் ஒன்று சிக்கியது. இந்த பென்டிரைவ் மூலம்தான் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் ஊடகங்களுக்கு பகிரப்பட்டது என்று தெரிந்தது.

இந்த பென்டிரைவை சவுக்கு சங்கர் பயன்படுத்தியதைக் கண்டுபிடித்த போலீசார், சவுக்கு சங்கரின் சகோதரி பெயர் சுஜாதா என்பதால், அவர்தான் தனது சகோதரியின் பென்டிரைவில் ரகசிய தொலைபேசி உரையாடல்களை பதிவுசெய்து ஊடகங்களுக்கு அளித்தார் முடிவுகட்டினர்.

சுஜாதாவின் பென்டிவ்:

தங்கை சுஜாதாவின் பென்டிரைவை பயன்படுத்தியதால் தான் சவுக்கு சங்கர் முதல் முறையாக சிறைக்குச் சென்றார். இப்படித்தான் தெரிந்தோ தெரியாமலோ சுஜாதா தனது அண்ணன் சவுக்கு சங்கர் சிறை செல்ல காரணமாக ஆகிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது.

சஜாதா இப்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவியில் பணிபுரிந்துவருகிறார். தன்னுடன் கல்லூரில் ஒன்றாகப் படித்தவரும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான சசிகாந்த் செந்திலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவர். 2024 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருக்கிறார்.

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு; விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு

click me!