அவுட் ஆஃப்தி தி பாக்ஸ் திங்கிங் என்ற கணித பாடத்திட்டத்தின் அடுத்த நிலைகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
புதுமையான சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஐஐடி, கடந்த ஆண்டு‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ (Out of the box thinking) என்ற பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த கணித பாடத்திட்டத்தின் நிலை 1 மற்றும் 2 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். இந்த பாடத்திட்டம் கட்டணமின்றி ஆன்லைனின் கற்பிக்கப்படுகிறது.
இந்த படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு மையங்களில் இறுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வெழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும். தேர்வு எழுதுவதற்கும் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மையங்களில் இத்திட்டம் இலவசமாக வழங்கப்படும்.
undefined
இதையும் படிங்க : இப்படியா பண்றது.! பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் எம்.பி..!
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள அனைவருக்கும் ஆன்லைனில் இலவசமாக பாடத்திட்டம் கிடைக்கிறது. மேலும் இந்த பாடத்திட்டம் பயிற்றுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் இந்த கணிதப் பாடத்திற்கான 3 மற்றும் 4 நிலைகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி மே 7 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் pravartak.org.in/oobtregistration_math இல் பதிவு செய்யலாம் பாடத்திற்கான இறுதித் தேர்வு தேர்வு மையங்களில் நடத்தப்படும்.
ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி காமகோடி இதுகுறித்து பேசிய போது, “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் திட்டத்தின் நிலை 1 மற்றும் 2 இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படிப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது பெரிதும் பலனளிக்கும். புதுமையான முயற்சிக்கு வித்தியாசமாக சிந்திப்பது முக்கியம். இளம் மனதை வித்தியாசமாக சிந்திக்கப் பயிற்றுவிப்பதல் நமது தேசத்திற்கு ஆக்கப்பூர்வமான இளைஞர்களை உருவாக்க உதவும். இந்த பாடத்திட்டம் மூலம் 10 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : சந்திரபாபு நாயடுவுக்கு நடந்தது தான் நிதிஷ்குமாருக்கும் நடக்கும்.. பிரசாந்த் கிஷோர் கடும் விமர்சனம்