அதிமுகவில் புதிதாக 10 மாவட்ட செயலாளர்கள் நியமனம்..! மீண்டும் மீண்டும் இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுக்கும் ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Jul 29, 2022, 8:20 AM IST
Highlights

நீலகிரி, திருவண்ணாமலை உட்பட 10 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமிக்கு  ஓ.பன்னீர் செல்வம் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கி ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ் மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை தினந்தோறும் நியமித்து வருகிறார். ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்த ஓபிஎஸ், எடப்பாடிபழனிசாமிக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நீலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். 

பேச்சிலும் செயலிலும் முதல்வராக நடந்துகொண்டார்.. முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டித் தள்ளிய அண்ணாமலை..!

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

1. திரு. பையூர் A. சந்தானம்,திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர். (செய்யாறு, வந்தவாசி, ஆரணி, போளூர் சட்டமன்றத் தொகுதிகள்)

2. திரு. பீரங்கி J. வெங்கடேசன், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம் சட்டமன்றத் தொகுதிகள்) (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அம்மா பேரவைக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்)

3 திரு. எம். பாரதியார், நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர், (குன்னூர், உதகமண்டலம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிகள்) (கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்)

4.திரு. அ. விஜய பார்த்திபன் அவர்கள், அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர். (அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகள்)
(அரியலூர் மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்) 

ஆர்.பி.உதயகுமார்... ஆண்மகனா இருந்தா ஓபிஎஸ் வீட்டை தொட்டுப்பார்...! துள்ளி குதிக்கும் சையது கான்

5. திரு. குத்தாலம் T. கஜேந்திரன் மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர். (மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி சட்டமன்றத் தொகுதிகள்)
(குத்தாலம் வடக்கு ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்)

6. திரு. V. முரளி, ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர் (ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிகள்) (தலைவர், மாவட்ட அறங்காவலர் குழு, இந்துசமய அறநிலையத்துறை)

7. திரு. மா. தென்னரசு, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் (மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர் சட்டமன்றத் தொகுதிகள்) (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்)

8.திரு. அம்மன் பி. வைரமுத்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
(பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிகள்) (சென்னை புறநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்)
கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.


9.திரு. J. கிருஷ்ணாமூர்த்தி,திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர். (கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்றத் தொகுதிகள்) (திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்)

10. திரு. K. கிருஷ்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர். (திருவொற்றியூர், மாதவரம் சட்டமன்றத் தொகுதிகள்)
(திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்) 

கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா.. மோடியுடன் மேடை ஏறும் முருகன்.. ஸ்டாலினோடு விழாவுக்கு வரும் பொன்முடி.!

 

click me!