செஸ் ஒலிம்பியாட் லோகோ சதுரங்க குதிரைக்கு தம்பி என்று எதற்கு பெயர்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

By Narendran SFirst Published Jul 28, 2022, 8:37 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் லோகோவான சதுரங்க குதிரைக்கு தம்பி என்று பெயரிடப்பட்டதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

செஸ் ஒலிம்பியாட் லோகோவான சதுரங்க குதிரைக்கு தம்பி என்று பெயரிடப்பட்டதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், நடைபெறுகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த போட்டிக்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொள்கின்றனர். முன்னதாக தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டி என்பதால், தமிழக அரசு போட்டி நிகழ்வுகளை பிரபலப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இதற்கான லோகோ சதுரங்க குதிரை வடிவம் தம்பி என்ற பெயருடன் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாகவும், போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையிலும், அரசு துறை அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரு கைகளில் இரு பியானோ, இரு இசை..! உலகையே வியக்கவைத்த தமிழன்.. யார் இந்த லிடியன் நாதஸ்வரம்..?

இந்த நிலையில் தம்பி என்று எதற்கு பெயரிடப்பட்டது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழாவில் பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை. நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடைபெறுள்ளது. பிரதமர் மோடியை அழைக்க டெல்லி செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன். கொரோனா தொற்றால் என்னால் நேரில் சென்று அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என பிரதமர் உறுதியளித்தார். பிதரமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்கு பெருமை தரும் நாள் என்பதால் பிரதமர் மோடியை தொடங்கி வைக்க அழைக்கப்பட்டது.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகியது பாகிஸ்தான்... காரணம் என்னானு தெரியுமா?

குஜராத் முதல்வராக இருந்த போது 20,000 வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியை தொடங்க 18 மாதங்கள் ஆகும்; தமிழ்நாடு அரசு 4 மாதத்தில் ஏற்பாடு செய்துள்ளது. 4 மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது. தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும். அண்ணா அனைவரையும் தம்பி என்று கூப்பிடுவார். தம்பி என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்துவது. நாம் எல்லாம் ஒரே குடும்பம் என்பதை குறிப்பிடுவதாகும். அதனால் தான் செஸ் ஒலிம்பியாட் லோகோவான சதுரங்க குதிரைக்கு தம்பி என்று பெயரிடப்பட்டது. இந்தியாவில் உள்ள 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா. 36% இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள் தான். கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்தது; இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் 

click me!