விடாமல் அடுத்தடுத்து காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

Published : May 30, 2024, 08:43 AM ISTUpdated : May 30, 2024, 08:47 AM IST
விடாமல் அடுத்தடுத்து காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி..  லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

சுருக்கம்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த தனியார் தங்கும் விடுதியின் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் இதுவரை வழக்கு விசாரணைக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து  வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து ராமதாஸ் மற்றும் அன்புமணி குரல் கொடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: TTF Vasan Arrest: மீண்டும் கைதான யூடியூபர் டிடிஎப்.வாசன்.. இந்த முறை எந்த வழக்கில் தெரியுமா?

இந்நிலையில், மயிலாடுதுறை பெரியத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் தினசீலன்(31). இவர், சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல தினசீலன் நேற்று காலை பணிகளைச் செய்து விட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அறையில் சென்று பார்த்த போது தினசீலன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதுதொடர்பாக சுவாமிமலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில்  லட்சக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தது தெரியவந்தது. மேலும், விடுதியில் பணியாற்றி வருபவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையும் படிங்க:  வாய் கூசும் அளவுக்கு டபுள் மீனிங்! ஆபாச ஆங்கரால் பெண் தற்கொலை முயற்சி!VJ ஸ்வேதாவை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
கலைஞர் மகளிர் உரிமை தொகை! இன்னும் இரண்டே நாள் தான்! அக்கவுண்டில் லப்பாக வந்து விழப்போகும் ரூ.1000!