கொளுத்தும் வெயில்... கிடு, கிடுவென சரிந்த செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு.! குடிநீருக்கு சிக்கல் ஏற்படுமா.?

By Ajmal Khan  |  First Published May 30, 2024, 8:11 AM IST

கோடை வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு சரிந்து வருகிறது. பல மாதங்களுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு பல மாதங்களுக்கு பிறகு 50%-க்கு கீழ் சரிந்துள்ளது. 
 


வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதம் மத்தியிலேயே தொடங்கிவிட்டது. இதன் காரணமாக பல இடங்களில் அனல் காற்று வீசிவருகிறது. பொதுமக்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வரவே சிரமப்படும் நிலையானது உருவானது. மேலும் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் நாள் தோறும் தண்ணீர் குறைந்து வருகிறது. அந்த வகையில் பல மாதங்களுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் நிர் இருப்பு 50 சதவிகிதத்திற்கு கீழ் சென்றுள்ளது. தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது. இதனால் வரும் நாட்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையாக உள்ள ஏரிகளில் நீர் மட்டம் முற்றிலும் வற்றும் நிலை உருவாகும் என அஞ்சப்படுகிறது.

Latest Videos

IMD Report: கேரளாவில் 31ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

ஏரிகளின் நீர் மட்டம் இருப்பு என்ன.?

இந்த நிலையில் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் நீர்மட்டத்தை பொறுத்தவரை,  புழல் ஏரியில் நீர்இருப்பு 2926 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 290 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. செம்பரம்பாக்கத்தில் 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட  ஏரியில், நீர்இருப்பு 1808 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக ஏரியில் இருந்து 109 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 104 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 324 மில்லியன் கனஅடியாக உள்ளது.

ஏரிகளின் நீர் இருப்பு என்ன.?

மொத்தமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 46.66% நீர் இருப்பு உள்ளது குறிப்பாக . செம்பரம்பாக்கம் ஏரியில் 49.6% நீரும், புழல் - 88.67சதவிகித நீரும், பூண்டி - 10.03%, சோழவரம் - 9.62%, கண்ணன்கோட்டை - 64.8% நீர் இருப்பானது உள்ளது. தற்போது 46சதவிகித நீர் இருப்பு உள்ள நிலையில் இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு எந்த வித பிரச்சனையும் இன்று குடிநீர் விநியோகிக்க முடியும் என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!

click me!