தங்கத்தை பின்னுக்குத் தள்ளிய வெங்காயம்..!! கிலோ 200 ஐ நெருங்கியது..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 4, 2019, 12:11 PM IST
Highlights

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை . ஒரு ரூபாய் முதல் 130 ரூபாய் வரையிலும் சின்ன வெங்காயத்தின் விலை 140 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.  
 

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன  வெங்காயத்தின் விலை 200 ரூபாயை நெருங்கி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பதுக்கல் மற்றும் போதிய அளவில் விளைச்சல் இல்லாமை போன்ற காரணங்களால் நாடு முழுவதும்  வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  அதேபோல் வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காய லாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதேநேரத்தில் வட மாநிலத்தில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால் ,  தமிழகத்திற்கு வரத்து  குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது . வழக்கமாக நாள் ஓன்றுக்கு  100 லாரிகளில் 20 டன் வெங்காயம் வரும் நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு  30 லாரிகள் முதல் 35 லாரிகள்  மட்டுமே வெங்காய வரத்து உள்ளது .  கடந்த ஆண்டு இதே  நாளில் பெரிய வெங்காயம் 45 ரூபாயாகவும் சின்னவெங்காயம்  160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, ஆனால்  பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது .  இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை . ஒரு ரூபாய் முதல் 130 ரூபாய் வரையிலும் சின்ன வெங்காயத்தின் விலை 140 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

 

வெங்காயம் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விரைவில்  வெங்காயத் தட்டுப்பாடு கலையப்படும் என்றும் அதற்காக விரைவில் இறக்குமதி செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  ஆனால் இதுவரையிலும் வெங்காயம் வந்தபாடில்லை.   இதேபோல் கொல்கத்தா மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது கொல்கத்தாவில் ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாய் ஆகும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வரு குவிண்டால் வெங்காயத்தின் விலை  11 ஆயிரமாகவும்  உள்ளது  குறிப்பிடத்தக்கது . 
 

click me!