போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?

By Raghupati R  |  First Published Jul 19, 2022, 6:25 PM IST

போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்ககோரி, சிஐடியு வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி போக்குவரத்து கழகங்களில் வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை செவ்வாயன்று (ஜூலை 19) மேலாண் இயக்குநர்களிடம் சிஐடியு வழங்கியது.தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். 

6 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்த வேலைநிறுத்த அறிவிப்பை சிஐடியு வழங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாமிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணைத்தலைவர் எம்.சந்திரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஆர்.துரை, துணைப்பொதுச் செயலாளர் எம்.ரவிசங்கர் உள்ளிட்டோர் வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கினர். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்

அதில், ஆகஸ்ட் 3 அன்று அல்லது அதற்கு பின்னர் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் பணத்தை வைத்து கழகங்களை நடத்த கூடாது. மற்ற துறை ஊழியர்களைப்போல் பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகால பலன்கள். மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கழகங்களிலும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

click me!