மின் கட்டண உயர்வுக்கு கவலை வேண்டாம்.. அடிக்கடி பவர் கட் பண்ணி அரசு உதவும்.. திமுகவை நக்கல் அடித்த கஸ்தூரி

By Ajmal KhanFirst Published Jul 19, 2022, 4:26 PM IST
Highlights

தமிழக அரசு மின் கட்டண உயர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், மின்கட்டண உயர்வு குறித்து கவலைப்பட வேண்டாம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

  1.  

மின் கட்டண உயர்வு

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்த்து வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு 28 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில்  மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளதாகவும் கூறினார். எனவே 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லையென குறிப்பிட்டார்.  2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும். 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் யூனிட்கள் அதிகரிப்பதற்கு ஏற்ப கட்டணமும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் உயர்கிறது மின் கட்டணம்.. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? இதோ முழு விவரம்.!

அரசியல் கட்சிகள் கண்டனம்

தமிழக அரசின் இந்த அறிவிப்ப தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மின் கட்டண உயர்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல சாக்குப்போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின் துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.  நீங்கள் செல்லச்செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? எனவும் அண்ணாமலை  கேள்வி எழுப்பி இருந்தார். இதே போல டி.டி.வி.தினகரன் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல், மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். இது தான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா..! மின் கட்டண உயர்வுக்கு எதிராக சீறிய அண்ணாமலை

மின் கட்டண உயர்வு-கவலை வேண்டாம்

இதே போன்று அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் காட்டி தனது கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வரும் நடிகை கஸ்தூரியும் திமுக அரசை விமர்சித்து டுவிட்டர் பதவிட்டுள்ளார். அதில், TNEB மின்சார விலையேற்றம் எதிர்பார்த்ததுதான்.  ஆனால்  கவலை வேண்டாம். மக்களின் Current bill சுமை அதிகரிக்காத வண்ணம்  அரசாங்கம் அடிக்கடி  power cut செய்து மக்களுக்கு உதவும்  என்ற நம்பிக்கை உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது..! தமிழக வரலாற்றில் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டதில்லை.! அலறும் ராமதாஸ்

 

click me!