கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை வழக்கில் இதுவரை 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும், அவர்களில் 3 பேருக்கு கையிலும், ஒருவருக்கு காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை வழக்கில் இதுவரை 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும், அவர்களில் 3 பேருக்கு கையிலும், ஒருவருக்கு காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திடீர் என ஏற்பட்ட வன்முறை பள்ளியில் உள்ள பேருந்துகள், வகுப்பறைகள், அலுவலகம் என அனைத்தும் தீக்கிரையானது. இதனையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையை துண்டியதாக அதிமுக ஐடிவிங் பிரிவைச் சேர்ந்தவர் அதிரடி கைது..!
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் தொடர்புடையவர்களை சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீசார் 128 பேர் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க;- அந்த ஸ்கூல ரெடி பண்ண இன்னும் 2 மாசம் ஆகும்! அதுவரை அங்கு பயின்ற மாணவர்களை இங்கு தான் படிக்க வைக்கனும்!
பின்னர் அவர்களை கள்ளக்குறிச்சி 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் 20 சிறுவர்கள் கடலூர் கூர்நோக்கு சிறார் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் காவல் நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்தனர். மேலும் அவர்களில் 3 பேருக்கு கையிலும் ஒருவருக்கு காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி முதல்வர் அறையில் ஆணுறை வந்தது எப்படி..? மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகிகள் பதில்