யூ டியுப்பர் சவுக்கு சங்கர் மீது நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை கிளை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் பிரபலங்களை விமர்சித்த சவுக்கு
தமிழக அரசியல் பிரபலங்களாக உள்ள கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ், அண்ணாமலை என அனைவரையும் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வருபவர் சவுக்கு சங்கர். தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியான சங்கர், தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து சவுக்கு இணையதளத்தை சங்கர் நடத்தி வந்தார். இதனையடுத்து சவுக்கு சங்கர் சமூக வலைதளங்களில் பிரபலமாக வலம் வரும் இவர், தனது இணையபக்கம், ட்விட்டர் பக்கம் மற்றும் பல்வேறு யூட்யூப் சேனல்களில் அன்றாட அரசியல் நிகழ்வு குறித்து காரசாரமாக பேசி வருகிறார். திமுக, அதிமுக நிர்வாகிகள் தொடர்பாகவும், அந்த கட்சியின் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட முடிவுகளையும், ஊழல்களையும் விமர்சித்துள்ளார். அந்தவகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுக அரசு ஜி.ஸ்கொயர் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இதன் காரணமாக மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் முடியாத வேலைகளை ஜி-ஸ்கொயர் நிறுவனர் சாதித்து முடித்துள்ளதாகவும், இதற்க்கு சபரீசன் மற்றும் கார்த்திக் துணை இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதனையடுத்து போலீசார் ஜூனியர் விகடன், மாரிதாஸ், மற்றும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்தது.
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. தமிழக அரசு அதிரடி முடிவு !
டுவிட்டர் பக்கம் முடக்கம்
மேலும் சவுக்கு சங்கர் நீதித்துறையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்தும், காவல்துறையில் பின்பற்றப்படும் ஆர்டலி முறை பற்றியும் கடுமையான விமர்சனங்களை சமீபத்தில் முன்வைத்து இருந்தார். மேலும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் கடந்த காலங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து இருந்தார். இதன் காரணமாக சவுக்கு சங்கர் டுவிட்டர் பக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் பக்கத்தை முடக்கும் படி பலரும் டுவிட்டர் நிறுவனத்திற்கு புகார்களையும் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் டுவிட்டர் பக்கம் கடந்த மாதம் முடக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் உத்தரவை அடுத்து சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில், வேறு ஒரு டுவிட்டர் பக்கம் மூலமாக தனது கருத்துகளை சவுக்கு சங்கர் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
சவுக்கு சங்கர் மீது வழக்கு
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்து்ள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரைக்கிளை பதிவாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட குற்றச்சாட்டில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்வதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் அய்யா எதுவா இருந்தாலும் என் கிட்டயே கேக்கலாம். கோர்ட்டில் பேச வேண்டாம். மாரிதாஸ் வழக்கு விசாரிக்கும்போது, ஒரு நாள் காலை 6 மணிக்கு அழகர் கோவிலில் யாரை சந்தித்தீர்கள் ? என சவுக்கு சங்கர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் படத்தை பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார். எனவே இந்த டுவிட்டர் பதிவிற்காகத்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்