ஸ்ரீமதிக்கு நீதி கேட்டால் கைது செய்து சிறையில் அடைப்பீர்களா.. 128 பேரை விடுதலை செய்யுங்க..கொதிக்கும் தடா ரஹீம்

Published : Jul 19, 2022, 04:06 PM ISTUpdated : Jul 19, 2022, 04:17 PM IST
ஸ்ரீமதிக்கு நீதி கேட்டால் கைது செய்து சிறையில் அடைப்பீர்களா.. 128 பேரை விடுதலை செய்யுங்க..கொதிக்கும் தடா ரஹீம்

சுருக்கம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக 20 சிறார்கள் உட்பட 128 பேரை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக 20 சிறார்கள் உட்பட 128 பேரை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது மேலும் இது தொடர்பாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:- 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்ய கோரி நடந்த போராட்டத்தில் உணர்ச்சி மிகுதியால் சில வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கலாம் இந்த வன்முறை சம்பவங்களை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால் தனியார் பள்ளி கல்லூரிகளில் தொடர்ந்து மாணவிகள் மரணம் அடைவதை பார்த்து யாரும் ஆனந்தம் அடைய முடியாது. 

இதையும் படியுங்கள்: திமுகவில் உருவாகப் போவது ஏக்நாத் ஷிண்டேவா, சந்திரபாபு நாயுடுவா..? ஹெச். ராஜாவுக்கு வந்த ஆசை.!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி கல்லூரிகளின் முதலாளிகள் வானத்தில் இருந்து குத்தித்த தேவ தூதுவர்கள் இல்லை தங்கள் தங்கள் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் மரணம் அடைந்தால் அரசியல் வாதிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் துணை கொண்டு உண்மைகளை மூடி மறைப்பதே தொழிலாக கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு எதிராக நடந்த சம்பவங்களை வன்முறை கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.

இதையும் படியுங்கள்: நீதிபதியையே ரவுண்டு கட்டிய சவுக்கு சங்கர்..! வழக்கு போட சொல்லி அதிரடி காட்டிய மதுரை ஹைகோர்ட்

அதிகார திமிரில் மாணவர்களின் உயிருடன் விளையாடும் பண முதலைகளுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் சமூக செயற்பாட்டாளர் உள்ளனர். வீட்டு வாடகை ஒரு சில நாட்கள் தாமதமானாலும் வீட்டு உரிமையாளர்கள் பொறுத்து கொள்கின்றார், ஆனால் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதா மாதம் கட்டணம் சரியா கட்டிவிட வேண்டும் இல்லை என்றால் பணம் கட்டாத மாணவர்களை எல்லா மாணவர்களுக்கு முன் நிற்க வைத்து அசிங்கப்படுத்துவது உட்பட

கொரோன ஊரடங்கு காலத்தில் கூட பள்ளி கட்டணம் கட்ட சொல்லி வற்புறுத்திய கொடுமை எல்லாம் நடந்து உள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீ மதி மரணம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 20 சிறார்கள் உட்பட 128 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகின்றோம் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையத்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு