கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை, கலவரம் எதிரொலி... மாவட்ட எஸ்.பி., ஆட்சியர் ஆகியோர் மாற்றம்!!

Published : Jul 19, 2022, 04:52 PM IST
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை, கலவரம் எதிரொலி... மாவட்ட எஸ்.பி., ஆட்சியர் ஆகியோர் மாற்றம்!!

சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வகுமார் மற்றும் ஆட்சியரை ஸ்ரீதர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வகுமார் மற்றும் ஆட்சியரை ஸ்ரீதர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியூர் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மாணவி ஒருவர் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையும் வந்துள்ளது. இதுத்தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையின் பாதுகாப்பை மீறி, ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கு எல்லாம் தீவைத்து, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கு.. 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக தகவல்..!

இது கலவரமாக மாறியது. இதனையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கலவரத்தில் தொடர்புடையவர்களை சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீசார் 128 பேர் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கள்ளக்குறிச்சி 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. தமிழக அரசு அதிரடி முடிவு !

இதில் 20 சிறுவர்கள் கடலூர் கூர்நோக்கு சிறார் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவண் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live Updates 07 December 2025: அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்
தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!