இன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமாம் ! வானிலை ஆய்வு மையம் சொல்லுது !!

By Selvanayagam PFirst Published Aug 20, 2019, 11:27 PM IST
Highlights

வளிமண்டல மேலடுக்கில், ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி  மற்றும்  காரைக்காலில்  அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்நது மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருச்சியில் 13 செ.மீ., மழையும், கிருஷ்ணிகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சேலம் வாழப்பாடியில் 8 செ.மீ., பெரம்பலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இன்று மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், துடியலூர், இடையர்பாளையம், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம், சாய்பாபா காலனி, டவுன்ஹால் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கில், ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி  மற்றும்  காரைக்காலில்  அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதுல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த . ஜூன் 1 முதல் இன்று வரை 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 33 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5 செ.மீ., அதிகம். இவ்வாறு புவியரசன் கூறினார்.

click me!