அடுத்து ஒரு ரவுண்டு வரப்போகும் தென்மேற்கு பருவ மழை…. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி….

First Published Jul 7, 2018, 2:00 PM IST
Highlights
Next round rain by south west moonsoon in tn kerala karnataka


இந்தியாவிக்கு அதிக மழைப் பொழிவைத் தரும்  தென் மேற்கு பருவக் காற்று மீண்டும் வலுப் பெற்று வருவதாலும், வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா , மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் மழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.

பொதுவாக தென் மேற்கு பரவ மழை ஜுன் மாதம் முதல் வாரத்தில்தான் தொடங்கும். ஆனால் இந்த  ஆண்டு வழக்கத்தைவிட சற்று முன்பே அதாவது மே இறுதி நாட்களிலேயே தொடங்கிவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா மற்றும் வட மாவட்டங்களிலும் செம மழை பெய்தது.

இந்த மழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது மேட்டூர் அணையில் 60 அடி தண்ணீர் உள்ளது. இதே போன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன.

இதனிடையே கடந்த வாரம் தென் மேற்கு பருமழை சற்று ஓய்ந்திருந்தது. தற்போது தென்மேற்கு பருவக் காற்று வலுவடைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக IMD  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக மழைப் பொழிவை தரும் தென்மேற்கு பருவக்காற்று மீண்டும் வலுப்பெற்று வருகிறது என தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும் கூறியுள்ளது.

இதனால் தென் மேற்கு பருவமழை மீண்டும் ஒரு ரவுண்டு வரும் என்றும், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான  குடகு மற்றும் கேரளாவின் வயநாடு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

click me!