மக்களே உஷார்.. தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது.! எங்கெல்லாம் தெரியுமா ?

By Raghupati RFirst Published Jun 14, 2022, 12:05 PM IST
Highlights

Heavy rain : தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி,பெரம்பலூர்,புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

அதேபோல, சென்னையை பொறுத்தளவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. நாளை மற்றும் ஜூன் 16, 17-ஆம் தேதிகளில் தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் 15, 16, 17 ஆகிய தேதிகளில் லட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி,கேரளா – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ? 

இதையும் படிங்க : திமுக அமைச்சரின் மதவெறி செயலை கண்டிக்கிறோம்.. ஒன்று திரளும் இந்து அமைப்புகள் - சமாளிக்குமா திமுக ?

click me!