Thangam Thennarasu Vs Edappadi Palanisamy: நீட் தேர்வை ரத்து செய்ய கூட்டணி வைக்க தயாரா என எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுகவிற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?
19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?
இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன? உதயநிதி ஸ்டாலின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
இதையும் படிங்க: வசமாக சிக்கிய மிதுன்! அமித் ஷாவிடம் இபிஎஸ் சரண்டராக இதுதான் காரணம்! அதிமுக முன்னாள் நிர்வாகி பகீர்!
நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்
மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு. எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். மாணவர்களை ஏமாற்றாதீர்கள் மு.க.ஸ்டாலின் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறை! எப்படி துடைக்கப் போறீங்க ஸ்டாலின்? கொதிக்கும் இபிஎஸ்!
இபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு கேள்வி
இதுதொடர்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில்: ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று கழகத்தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார். டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே. பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா கூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.