தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நாணயம், தொல்லியல், கல்வி கண்காட்சி ஆகிய முப்பெரும் விழா அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சரயு தலைமை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் கிருஷ்ணகிரி அருகே மயிலாடும்பாறை என்னுமிடத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் 4200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் பயன்படுத்திய கத்தி, வால் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் கல்வித்துறையின் திட்டங்கள், பழங்கால நாணயங்கள், கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் இரவு பகல் பாராமல் திட்டமிட்டு உழைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தில் தேர்ச்சி விகிதத்தில் 15 எண்ணிற்குள் வருவதற்கு முழு கவனம் செலுத்தி உழைக்க வேண்டும். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். பேருந்து வசதி, பள்ளி தரம் உயர்த்தல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொது தேர்வுக்கான தேதி அறிவித்த பிறகு 18 மாவட்டங்களில் தலைமை ஆசிரியரை சந்தித்து அறிவுரைகள் வழங்கி உள்ளேன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
113 தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன். ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறைக்கு நேரடியாக சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், கற்றல் திறன்களை ஆய்வு செய்து வருகிறேன். பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஏற்கனவே 1000 வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் ஆயிரம் வகுப்பறைகள் விரைவில் முதலமைச்சரால் திறக்கப்பட உள்ளது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 18,000 வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவ மாணவியர்கள் கற்றல் திறன் ஆசிரியர் பெருமக்கள் மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.