திங்கட்கிழமை முதல் சென்னையில் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் சென்னையில் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்ட நெரிசலைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று மெட்ரோ நிர்வாகம் கருதுகிறது.
இதுவரை 9 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகள் கூட்ட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? நெட்பிளிக்ஸ் உங்களுக்கு ப்ரீ தான்... மிஸ் பண்ணாதீங்க...
முன்னதாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்ட நாளைக் கொண்டாடும் வகையில், 5 ரூபாயில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 3ஆம் தேதி 5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் QR கோடு பயணச்சீட்டு பெற்று பயணிப்பவர்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை கிடைக்கும். சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ், பிரிண்ட் செய்யப்பட்ட QR கோடு டிக்கெட்டுகளுக்கு இந்த்ச் சலுகைக்கு கிடைக்காது.
15,000 காலிப் பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாவது எப்போது?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D