தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை கண்டித்து வருகின்ற திங்கள் கிழமை அவரது வீடு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.பி. பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறந்த நடிகை என்பதை குஷ்பு தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்; குஷ்பு மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார்.
இந்தப் பிரச்சினையைத் தொடங்கிய நடிகர் மன்சூரலிகானே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பூ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்; வேளச்சேரி, செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்;
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து, அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி..எஸ்டி.. பிரிவின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.