ஒரே பிரசவத்தில் குறைந்த எடையுடன் பிறந்த 3 குழந்தைகள்; சாதித்து காட்டிய திண்டுக்கல் அரசு மருத்துவர்கள்
திண்டுக்கல்லில் ஒரே பிரசவத்தில் குறைந்த எடையுடன் பிறந்த மூன்று குழந்தைகள், தாயையும் சேய்களையும் உயிருடன் மீட்டெடுத்து சிறப்பாக பராமரித்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்.
திண்டுக்கல் சிலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சசி - ரிஷா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சசி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரிஷா கர்ப்பம் தரித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் ரிசாவிற்கு தைராய்டு இருப்பதாகவும் அதே போல் மூன்று குழந்தைகள் கருதரித்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரிசாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரசவத்திற்கு அனுமதித்தபோது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு இருப்பதனை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கடந்த மாதம் 21ஆம் தேதிமகப்பேறு சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை மூலம் மூன்று குழந்தைகளையும் உயிருடன் மீட்டனர்.
மேலும் பிறந்த மூன்று குழந்தைகளும் சாதாரணமாக குழந்தைகள் இருக்கும் எடையை விட மிகவும் குறைந்த அளவில் இருந்துள்ளன. ஒரு கிலோ 250 கிராம், ஒரு கிலோ 50 கிராம், ஒரு கிலோ 300 கிராம் என்ற விகிதத்தில் குழந்தைகள் இருந்துள்ளன. குழந்தைகளை குழந்தைகள் நல மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து செயற்கை சுவாசம் மற்றும் நுரையீரல் வளர்ச்சி ஆகிய சிகிச்சைகள் அளித்து பாதுகாத்தனர். மேலும் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய செவித்திறன் மற்றும் இதய நோய், மூளை பாதிப்பு ஆகிய பரிசோதனைகள் போன்றவை செய்யப்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜின் நாட்கள் எண்ணப்படுகின்றன, இது தமிழக மக்களின் சாபக்கேடு - அண்ணாமலை சரவெடி
சிசுக்களின் எடையை அதிகரிக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கி மூலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கி குழந்தையின் வளர்ச்சிக்கு உதவினர். அதேபோல் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எவ்வாறு எடையை அதிகரிக்க வேண்டும். அதேபோல் நோய் தொற்று வராமல் தவிர்ப்பது என்பது குறித்தும் ரிசாவிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. குறை மாதம், குறைந்த எடையில் பிறந்த மூன்று குழந்தைகளும் கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவர்களை கண்காணித்து வந்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதேபோல் குழந்தைகளின் எடை அதிகரிக்க கங்காரு பராமரிப்பு முறை மூலமாக குழந்தையை தாயின் நெஞ்சுப் பகுதியோடு வைத்து அணைத்தது போல் தாயின் வெப்பநிலை குழந்தைக்கு சீராக கிடைக்கும் வழியில் குழந்தையை பராமரிப்பது மற்றும் தாய்ப்பால் வழங்குவது போன்றவற்றை மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். தற்போது குழந்தைகள் ஆரோக்கிய நிலைக்கு வந்துள்ளனர்.
பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பில் நடிகர் அருண் பாண்டியன்
இது பற்றி மருத்துவர்கள் கூறும்பொழுது, அரசு மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இது போன்று தனியாக பிரிவை ஏற்படுத்தி குறைமாதம் மற்றும் குறைந்த எடைகளில் பிறக்கும் குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் அதேபோல் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் தாய்மார்களுக்கும் பிரத்யேகமாக அறைகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவித்தனர்.