Hanuman Jayanti : 1 லட்சத்து 8 வடை மாலையில்.. காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்.. அனுமன் ஜெயந்தி கோலாகலம் !

By Raghupati RFirst Published Jan 2, 2022, 8:30 AM IST
Highlights

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை இன்று சாட்டப்பட்டது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்றது ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி . ஒரே கல்லால் 18 அடி உயரத்தில் ஆன ஸ்ரீநாமக்கல் ஆஞ்சநேயர் சாமி கைகூப்பி வணங்கியபடி காட்சி அளிக்கிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் படி தமிழகம் முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. 

நாமக்கல் ஆஞ்நேயருக்கு 1,00,008 வடைமாலை சாட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இனைதொடர்ந்து அலங்ககரிப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

click me!