21 காளைகளை அடக்கிய திருச்சி முருகானந்தம் … காரை பரிசாக தட்டிச் சென்ற சாதனைத் தமிழன் !!

By Selvanayagam PFirst Published Jan 21, 2019, 7:51 AM IST
Highlights

கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை அடக்கிய திருச்சியைச்  சேர்ந்த முருகானந்தம் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு புத்தம் புதிய கார் ஒன்று பரிசளிக்கப்பட்டது.

தை மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து உலக சாதனை படைக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதைல் முதல்முறையாக ஜல்லிக் கட்டில் கலந்துகொள்ளும் மாடுபிடிவீரர்களுக்கு மட்டுமின்றி பார்வை யாளர்களுக்கும் காப்பீடு செய்யப் பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த திருச்சி ஜீயர்புரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் மாடு முட்டி படுகாயமடைந்தார். உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல் லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதேபோல பார்வையாளராக வந்திருந்த இலுப்பூரை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்த ராமு மாடு முட்டி படுகாயமடைந்தார். திருச்சிமருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த 43 பேர் திருச்சிமருத்துவக்கல்லூரி மருத்துவமனை யிலும், மணப்பாறை, இலுப்பூர் அரசுமருத்துவமனைகளிலும் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு கார், மோட்டார்பைக், சைக்கிள், மிக்சி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள்வழங்கப்பட்டன. 21 காளைகளை அடக்கிய திருச்சியைச் சேர்ந்தவீரர் முருகானந்தம் முதலிடத்தை யும், களத்தில் நன்றாக விளையாடியராப்பூசல் கிராம காளை முதலிடத்தை யும் பெற்றனர். முதலிடம் பெற்ற வீரர்மற்றும் காளைக்கு கார் பரிசளிக்கப் பட்டது.

ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோன்று, சிறந்த காளையாக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான ராப்பூசலைச் சேர்ந்த பி.முருகானந்தம் என்பவரது காளை யும் தேர்வு செய்யப்பட்டது. இருவரையும் பாராட்டி தலா ஒரு கார் வழங்கப் பட்டது. இவர்களுக்கு மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பரிசு வழங்கினர்.

click me!