ஓட்டுனர், நடத்துனர் மது அருந்திவிட்டு வந்தால் கடும் நடவடிக்கை.. எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு

By Thanalakshmi V  |  First Published Oct 27, 2022, 12:56 PM IST

பேருந்து பணிமனையில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திவிட்டு வந்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளார். 
 


இதுக்குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 

1, பணிமனையின்‌ நுழைவு வாயிலில்‌ இருந்து தாங்கள்‌ செல்லும்‌ பிரிவிற்கு ஓரமாகவும்‌, பாதுகாப்பாகவும்‌ சென்றிட வரையறுக்கப்பட்ட (மஞ்சள்‌ வர்ண குறியீடு), பகுதியில்‌ நடந்து செல்ல வேண்டும்‌.

Tap to resize

Latest Videos

2, இருசக்கர வாகனங்களை எக்காரணம்‌ கொண்டும்‌ வாகனம்‌ நிறுத்தும்‌ இடம்‌ தவிர மற்ற பகுதிகளில்‌ நிறுத்தவும்‌ கூடாது, இயக்கிச்‌ செல்லவும்‌ கூடாது.

3, பணிமணையின்‌ உள்ளோ வரும்‌ பேருந்துகள்‌ நுழைவு வாயிலில்‌ இருந்து பணிமனைக்குள்‌ வரும்போது, பணியாளர்களின்‌ பாதுகாப்பிற்காக கண்டிப்பாக 5கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ மட்டுமே இயக்கப்பட வேண்டும்‌. இதற்காக பணிமனையின்‌ நுழைவு வாயில்‌ மற்றும்‌ 24 பகுதிகளில்‌ 5 கிலோ மீட்டர்‌ வேகம் மட்டுமே என்கிற விளம்பரப்‌ பலகையை பொருத்திட வேண்டும்‌.

மேலும் படிக்க:தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செல்லும் வழியில் நின்ற மர்ம வாகனம்.! கோவை போலீசார் தீவிர சோதனை

4, தொழில்நுட்பப்‌ பணியாளர்கள்‌ பணி நேரத்தில்‌ உரிய காலணிகள்‌ அணிந்து பணியாற்றவதால்‌ கால்களில்‌ எவ்வித பாதிப்பும்‌ இன்றி பாதுகாப்புடன்‌ பணிபுரியலாம்‌.

5, பணிமனை உள்ளே பணி செய்யும் ஊழியர்கள் புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் நிலையில் இருக்க கூடாது.

6, தொழில்நுட்ப பணியாளர்கள்‌ "welding” பணி செய்யும்‌ போது கண்களில்‌ பாதிப்பு ஏற்படாமல்‌ பாதுகாத்திட “Safty Glass” அணிந்து பணியாற்றிட வேண்டும்‌. மேலும்‌, “Welding" பணியின்‌ போது அருகில்‌ பெயிண்ட்‌ மற்றும்‌ எளிதில்‌ தீப்பற்றக்‌ கூடிய
எவ்வித பொருட்களோ, திரவமோ இல்லாமல்‌ அகற்றிவிட்டு பாதுகாப்புடண்‌ பணி செய்திட வேண்டும்‌. மேலும்‌, பேருந்திற்குள்‌ "welding" பணி செய்திடும்போது கண்டிப்பாக Battery Wire துண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும்‌.

7, பகல்‌ பொழுதில்‌ பேருந்துகள்‌ தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள்‌ இயக்கப்படும்‌ போது ஓட்டுனர்‌ உரிமம்‌ இல்லாத எந்த ஒரு பணியாளரும்‌. பேருந்தினை இயக்கக்கூடாது. பேருந்தினை பணிமனையின்‌ உள்ளே வேறு இடம்‌ மாற்றி நிறுத்த வேண்டி இருப்பின்‌, மேற்பார்வையாளரின்‌ அணுமதியுடண்‌ Heavy License உள்ள மா.போ.க-வில்‌ பயிற்சி பெற்ற தொழில்நுட்பப்‌ பணியாளர்களை அல்லது  work shop driver களை மட்டுமே பயண்படுத்த வேண்டும்‌. பேருந்தினை பின்னோக்கி இயக்க வேண்டிய சூழலில்‌ கண்டிப்பாக மற்றொரு பணியாளர்‌ signaller ஆக பணி செய்திட வேண்டும்‌ என்பதணை உறுதிப்‌படுத்திட வேண்டும்‌.

8. பேருந்து பணிமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை கிளை மேலாளரும், பணியிலிருக்கும் மேற்பார்வையாளரும், பாதுகாவலர்களும் கண்டிப்பாக உறுதிபடுத்த வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். 

மேலும் படிக்க:கோவை கார் வெடி விபத்து..! பாஜக தலைவர் அண்ணாமலையை தான் முதலில் என்ஐஏ விசாரிக்க வேண்டும்..! செந்தில் பாலாஜி
 

click me!