தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செல்லும் வழியில் நின்ற மர்ம வாகனம்.! கோவை போலீசார் தீவிர சோதனை

By Ajmal Khan  |  First Published Oct 27, 2022, 11:59 AM IST

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக தெலுங்கான ஆளுநர் வருகையையொட்டி கேட்பாரற்று நிற்கும் கார்களில் தொடர் சோதனையில்  போலீசார் நடத்தப்பட்டு வருகின்றனர். 
 


கோவை உக்கடம்  கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சதி செயல் என போலீசார் கண்டறிந்து 6 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்றைய தினம் கோவை மாநகரில் கேட்பாரற்று சாலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

வெடி பொருட்களை பிலிப்கார்ட், அமேசானில் வாங்கிய அப்ஸர் கான்..! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Tap to resize

Latest Videos

இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவைக்கு வருகை தரவுள்ளார். இந்தநிலையில் கோவை அவிநாசி சாலையில் சாலையோரத்தில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் கருவிகளை கொண்டும், மோப்ப நாய்களை கொண்டும் சோதனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து காரின் உரிமையாளர் கண்டறியப்பட்டு அப்பகுதியில் இருந்த கார் அப்புறப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து அவ்வழியில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்படும் என்ஐஏ..! கோவை சிலிண்டர் வெடி விபத்தை ஒப்படைத்தது தவறு- சீமான் ஆவேசம்

click me!