
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுஞ்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி உள்ளனர்.
மேலும் படிக்க:கோவை கார் வெடி விபத்து..! இறந்த முபினின் உறவினர் அப்ஸர் கானை அதிரடியாக கைது செய்த போலீஸ்
அப்போது மிக்கேல்ராஜ் என்பவரது விசைபடகை சிறைபிடித்த அதிகாரிகள், அதில் இருந்த கிளிண்டன், பேதுரு, வினிஸ்டன், தயான், தானி, ஆனஸ்ட் ஆகிய 7 மீனவர்களை சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் பயன்படுத்திய விசைபடகையும் இலங்கை படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க:வெடி பொருட்களை பிலிப்கார்ட், அமேசானில் வாங்கிய அப்ஸர் கான்..! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் மீனவர்கள் மற்றும் விசைபடகை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.