#justiceforpondharani எந்த வக்கீலும் ஆஜராக கூடாது…! கோவை சம்பவத்துக்காக பொங்கிய பிரபல நடிகர்…

By manimegalai aFirst Published Nov 14, 2021, 8:11 PM IST
Highlights

கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கயவர்களுக்காக எந்த வக்கீலும் ஆஜராக கூடாது என்று பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கயவர்களுக்காக எந்த வக்கீலும் ஆஜராக கூடாது என்று பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. போராட்டங்கள் ஒரு பக்கம், பள்ளிக்கு எதிரான கருத்துகள் ஒரு பக்கம் கோவை மட்டுமல்ல…தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களும் வெடித்தன.

அதே நேரத்தில் பள்ளி மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பற்றிய ஒரு பேச்சும் காவல்துறை வட்டாரத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த கடிதம் ஆங்கிலம் கலந்த தமிழில் இருக்கிறது.

மேலும் அதில் கெட்ட வார்த்தைகளும் உள்ளது, பள்ளி மாணவி ஒருவர் சாகும் தருவாயில் இதுபோன்ற விவரங்களை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

காவல்துறையின் இந்த சந்தேகங்களை செவிமடுக்கும் சமூக ஆர்வலர்கள், எது எப்படி என்றாலும் தீர, விசாரிக்கட்டும், இது தொடர்பாக முதலில் புகாருக்கு ஆளானவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுங்கள் குரல் எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் பாலியல் தொல்லை தந்ததாக புகாருக்கு ஆளான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளார். போராட்டங்களை தொடர்ந்து அதிரடியாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் கயவர்களுக்காக எந்த வக்கீலும் ஆஜராக கூடாது என்று பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

 இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை.

என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா? சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

click me!