பிரதமருக்கு முதல்வர் கடிதம்; 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.1,056 கோடி விடுவிக்க கோரிக்கை

By SG Balan  |  First Published Jan 13, 2025, 8:09 PM IST

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க, ரூ.1,056 கோடி நிதியை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (திங்கட்கிழமை) கடிதம் அனுப்பியிருக்கிறார். நிதியை விடுவிக்க மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகதிற்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி இருக்கிறார்.


100 நாள் வேலை திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.1,056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு, ரூ.1,056 கோடி நிதியை விடுவிக்க மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகதிற்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (திங்கட்கிழமை) கடிதம் அனுப்பியிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற இந்தியாவிற்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும். இது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமியப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

தெற்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடங்கப்பட்ட நாள் முதல் தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பல்வேறு அளவுகோல்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர். 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 29% தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது" என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கிராஜுவிட்டி கணக்கிடுவது எப்படி? 5, 7, 10 ஆண்டு சர்வீஸுக்கு பணிக்கொடை எவ்வளவு?

click me!