பொங்கலுக்கு முன்பாகவே முடிந்த சென்னை புத்தக கண்காட்சி.! எத்தனை கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.?

Published : Jan 13, 2025, 07:39 AM ISTUpdated : Jan 13, 2025, 07:59 AM IST
பொங்கலுக்கு முன்பாகவே முடிந்த சென்னை புத்தக கண்காட்சி.! எத்தனை கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.?

சுருக்கம்

 48வது புத்தகக் காட்சியில் 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்து, 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை வாங்கினர். 1000 அரங்குகள், சமையல் முதல் வரலாறு வரை பல தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது

சென்னை புத்தக கண்காட்சி

எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சி ஓர் இளைப்பாறும் பூஞ்சோலையாக உள்ளது. அந்த வகையில் எப்போது புத்தக கண்காட்சி தொடங்கும் மக்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். இந்த வகையில் இந்தாண்டிற்கான புத்தக கண்காட்சி வெகு சிறப்பாகவே தொடங்கி முடிவடைந்துள்ளது. 1000 அரங்குகள் அமைக்கப்பட்டதில் சமையல், ஆன்மிகம், வரலாறு, குழந்தை கதைகள் என பல தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது. காலை தொடங்கி இரவு வரை புத்தக கண்காட்சியானது நடைபெற்றது. 

20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

இதில் நாள் தோறும் பல லட்சம் பேர் வருகை புரிந்தனர். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி குவித்தனர். அந்த வகையில்  48 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி   2024 டிசம்பர் 27 அன்று தொடங்கி நேற்று (ஜன 12) 2025 அன்று நிறைவு பெற்றது. 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகக்காட்சிக்கு 20 இலட்சம் வாசகர்கள் வருகை தந்தார்கள். சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை நடைபெற்றது.புத்தகக்காட்சியின்   நிறைவு நாள் நிகழ்வில்  புத்தகக் காட்சி நடைபெறுவதற்கு  உறுதுணையாக இருந்து உதவி புரிந்த கொடையாளர்கள், நிறுவனங்களை  சென்னை உச்ச நீதிமன்ற நீதிபதி  ஆர். மகாதேவன் அவர்கள். பாராட்டி கவுரவித்தார். 


முன்கூட்டியே முடிந்த புத்தக கண்காட்சி

மேலும் பதிப்புத் துறையில் நூற்றாண்டு , பொன்விழா, வெள்ளிவிழா கண்ட பதிப்பாளர்களையும் பாராட்டி சிறப்பு செய்து விழா நிறைவுப் பேருரை ஆற்றினார். இதனிடையே பல ஆண்டுகளாக பதிப்பு பணியில் ஈடுபட்டவர்களையும் கவுரவிக்கப்பட்டது. அதன் படி பதிப்புப் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த பதிப்பகங்களான பிரேமா பிரசுரம், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி பொங்கல் பண்டிகை தினத்திலும் நடைபெறும் அப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்தாண்டு கூடுதல் நாட்கள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட் நிலையில நேற்றோடு முடிவடைந்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சக மாணவர்களால் அடித்து கொ**ல்லப்பட்ட +2 மாணவன்.. சமுதாயம் எங்கே போகிறது..? அன்புமணி அதிர்ச்சி
எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!