அரசு பள்ளியில் பழங்குடியின மாணவிகள் கழிவறை சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் இது போன்ற சம்பவங்கள் ஒய்ந்தபாடியில்லை. இந்நிலையில் அரசு பள்ளியில் பழங்குடியின மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோவில்! அள்ள அள்ள தங்கம்! குவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு மலைகிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ததலைமை ஆசிரியர் உள்ளிட்ட 5 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையை பழங்குடியின மாணவிகள் 3 பேர் சுத்தம் செய்ய வைத்தது மட்டுமல்லாமல் கழிவறைக்கு தண்ணீர், நிரப்புவது, பள்ளியை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் இதை வீடியோ எடுத்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்!
இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் பள்ளி மாணவிகளை, ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணியை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.