காதலித்தது குத்தமா? இளைஞரின் தாயை கடத்தி ஆடைகளை கிழித்த கொடூர கும்பல்

By Velmurugan s  |  First Published Aug 17, 2024, 1:28 AM IST

தருமபுரி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரின் தாயை கடத்தி ஆடைகளை கிழித்தெறிந்ததாக இளம்பெண்ணின் தந்தை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு.


தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 24). கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இதே போன்று கீழ்மொரப்பூர் அடுத்த கணபதிபட்டி பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரது மகள் பவித்தரா (23). சுரேந்தர், பவித்ரா இருவரும் இருவேறு சமூகத்தினர் என்று சொல்லப்படும் நிலையில், இருவரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்துள்ளனர்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட கட்டாயப்படுத்தப்படும் ரோகித், கோலி? உண்மை என்ன

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் சுரேந்தர், பவித்ரா இருவரும் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பூபதி, சுரேந்தர் தான் தனது மகளை அழைத்துச் சென்றிருப்பார் என்று நினைத்து சுரேந்தரின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுரேந்தரின் தாய் முருகம்மாளை வீட்டில் இருந்து கடத்திச் சென்று வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று துன்புறுத்தி உள்ளனர்.

Aadudam Andhra: ஆடுதாம் ஆந்திரா; ஊழல் புகாரில் சிக்கும் நடிகை ரோஜா? 

மேலும் சுரேந்தர் இருக்கும் இடைத்தை சொல்லுமாறு அடித்து துன்புறுத்தி அவரை அரைநிர்வாணப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து அவர் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், கடத்தல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த அந்த கும்பல் முருகம்மாளை மொரப்பூர் சாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து முருகம்மாளை துன்புறுத்தியதாக இளம்பெண்ணின் தாய், தந்தை உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

click me!