யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த சூப்பர் திட்டம்.! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Jan 13, 2025, 1:59 PM IST

சென்னையில் யாசகம் பெறுவோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் புதிய இல்லம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் கருத்துருக்களை சமர்ப்பிக்கலாம்.


யாசகத்தை கட்டுப்படுத்த திட்டம்

பெற்ற மகன்கள், மகள்களால் கை விடப்பபட்டவர்கள், யாரது ஆதரவும் இல்லாதவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள்  தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்களிலும் யாசகம் பெற்று தங்களது வாழ்நாளை நகர்த்தி வருகிறார்கள். யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையிலும், இவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் நிதி உதவியோடு மறுவாழ்வு இல்லம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டம் தீட்டி செயல்படுத்தப்படுகிறது.  

Tap to resize

Latest Videos

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் சென்னை மாவட்டத்தில் யாசகம் கேட்டல் தடுத்தல் சட்டம், 1945 ன் கீழ், அரசு நிதி யுதவியுடன் புதியதாக யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லம் அமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருவுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மறுவாழ்வு இல்லம்

எனவே விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பத்துடன் கருத்துருவினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.13, சாமி பிள்ளைத் தெரு. சூளை, சென்னை 600 112 என்ற முகவரிக்கு 30.01.2025 அன்று மாலை 5.45-க்குள் சமர்ப்பிக்கவும். ஏதேனும் இக்கருத்துரு தொடர்பாக விபரங்கள் அறிய மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!