சட்டம் ஒழுங்கு சீர்கேடு... சோப்ளாங்கி அரசு" - முதலமைச்சர் விஜய்யை கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு... சோப்ளாங்கி அரசு" - முதலமைச்சர் விஜய்யை கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்!

Published : Oct 30, 2026, 02:02 PM IST

தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் கூட்டங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து பஞ்ச் டயலாக் பேசி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய், தற்போது குற்றங்களைக்கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கேரவனில் இருப்பது போல் யாராலும் அணுக முடியாத நிலையில் இருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், தவெக நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் தன் கட்சியினரைக் கட்டுப்படுத்தினாலே பாதியளவு குற்றங்கள் குறையும் என்றும் குறிப்பிட்டார். இந்த ஆளத் தெரியாத அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் அக்டோபர் 31-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

03:17பசும்பொன் தேவர் குருபூஜை: வைகோ நேரில் மலரஞ்சலி!
04:52இந்த ஆட்சி எப்போ ஒழியும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர் - பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு !
09:45சட்டம் ஒழுங்கு சீர்கேடு... சோப்ளாங்கி அரசு" - முதலமைச்சர் விஜய்யை கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்!
04:42நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் விஜய் மரியாதை !
05:51தேவர் ஜெயந்தி விழா: மலர் தூவி மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்!
06:24தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை & எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்: வைகோ காட்டம்!
07:54ஒரு நிலையற்ற ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
04:36பணப்பெட்டியும் வாக்குப்பெட்டியும் இருக்கும் வரை நேர்மையான ஆட்சி சாத்தியமில்லை ! சீமான் அதிரடி
04:24திரைக்கவர்ச்சி மோகம் இந்தியாவிலேயே நமது இனத்திற்குத்தான் அதிகம் ! சீமான் பரபரப்பு பேச்சு