ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு; ஆனால்....

By Velmurugan s  |  First Published Dec 31, 2022, 2:38 PM IST

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த காலக்கெடுவை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் வீடு, விவசாயம், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்டவற்றுக்கு மானியத்தின் அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இவ்வாறு இணைப்பதன் மூலம் மானியத்தை தடை செய்துவிடுவார்கள் என்று யாரும் எண்ண வேண்டாம்.

காதலனுடன் ஊர் சுற்றுவதற்காக தாயிடம் கடத்தல் நாடகம்; தலையில் தட்டி அனுப்பிய காவல்துறை

Tap to resize

Latest Videos

தனிநபர் பெயரில் எத்தனை வீடுகள் இருந்தாலும் அனைத்து வீட்டுக்கும் இலவச மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் மொத்தமாக சுமார் 2.57 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில், கடைசி தேதியான இன்றைய நிலவரப்படி 1.61 கோடி பேர் மட்டுமே தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள்  மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுயைில், தற்போது வரை 1.61 கோடி பேர் மட்டுமே தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். மீதம் உள்ளவர்களும் தங்கள் எண்களை இணைப்பதற்கு வசதியாக ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மேலும் 3 கோவில்களில் முழுநேர அன்னதான திட்டம்; முதல்வர் தொடங்கி வைத்தார்

தற்போது வரை 2811 முகாம்களில் இந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் கூடுதலாக 2811 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பயனாளர்களின் பகுதிக்கே சென்று மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற உள்ளது. ஆனால், இதன் பின்னரும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

click me!